முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆஸ்தான பாடலாசிரியரான விவேக், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முதல்வர் விஜய் குறித்து நெஞ்சைத் தொடும் எமோஷனல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மனம் திறந்து ஒருவரை நிறைவாகப் பாராட்டுவதிலும், மற்றவர்கள் மீது அளவுக்கு அதிகமான அன்பைக் கொட்டுவதிலும் நம் முதலமைச்சர் விஜய் அவர்கள் எப்போதும் முதன்மையானவர் என்று உருகியுள்ளார். மேலும், “இந்த அரசு அமைந்ததற்குப் பாதி காரணம் உன்னுடைய பாடல் வரிகள்தான்ப்பா” என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் தன்னை நேரில் அழைத்து பாராட்டியதாக விவேக் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

​நிஜமாகவே முதல்வர் விஜய் அவர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பின் மிகுதியால் தான் இந்த வார்த்தைகளைக் கூறினார் என்றும், தனது உழைப்பு மதிக்கப்படுவதாகத் தான் உணர்வதாகவும் விவேக் தெரிவித்துள்ளார். தான் திரையுலகிற்கு எழுதுவதற்கு முன்பே அவர் ஒரு இமாலய நட்சத்திரமாக உயர்ந்தவர் என்றும், இந்த பிரம்மாண்ட வெற்றி முழுக்க முழுக்க அவரது உழைப்புக்குக் கிடைத்த பரிசு என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தும், இத்தனை எளிமையாகப் பாராட்டும் அந்தப் பெருந்தன்மையான மனசுதான் நம் தளபதி என்று பாடலாசிரியர் விவேக் வெளியிட்ட இந்த வரலாற்றுப் பதிவு தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.