விசிக தலைவர் திருமாவளவனின் சிற்றன்னை செல்லம்மாள் (78) மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்தத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, தனது சிற்றன்னையின் மறைவை அவர் தெரிவித்தார். அவர் கொண்டிருந்த பாசத்தையும், மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன்” என்று ஸ்டாலின் உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஆழ்ந்த இரங்கல்!
அன்புச் சகோதரர் – எழுச்சித் தமிழர் @thirumaofficial அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.
சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும் – அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும்… https://t.co/RxxmTmAnSc
— M.K.Stalin (@mkstalin) August 17, 2025
“>
