மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய திமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் மிகப்பெரிய மாற்றம் நடக்கப்போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “பொறுத்திருந்து பாருங்கள், திமுகவிலிருந்து பெரிய தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளனர்” என்ற அவரது கூற்று, அதிமுக தலைவர்கள் திமுகவில் இணைந்துவரும் சூழலில், அரசியல்ரீதியாக புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.
