அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி மைத்ரேயன். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்து அவரின் வலது கை போல் செயல்பட்டார். அதன் பிறகு இபிஎஸ் அணியில் இணைந்து மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். கடந்த 2000-ம் ஆண்டு பாஜக கட்சியிலிருந்து மைத்ரேயன் விலகி அதிமுகவின் இணைந்து எம்பி யாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பாஜக கட்சியில் அவர் இணைவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீப காலமாகவே அதிமுகவிலிருந்து நிர்வாகிகள் விலகி பாஜகவில் இணைவதும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது மான சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது மீண்டும் ஓபிஎஸ் வலது கை போல் செயல்பட்ட மைத்ரேயன் பாஜகவில் இணைவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.