தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் சேதுக்குவாய்த்தான் அருகே திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது ஒரு தனியார் பள்ளி வாகனமும் அரசு பள்ளிக்குச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் எழிலரசன், ஸ்ரீமதி, திவாகரன் ஆகிய மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயம் அடைந்த மாணவர்களை உடனடியாக மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.