கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வாரிசு வேலை அடிப்படையில் அந்த சப் இன்ஸ்பெக்டரின் மகளான பூஜா என்பவருக்கு அந்த காவல் நிலையத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது கர்ப்பமாக உள்ள பூஜாவிற்கு அந்தக் காவல் நிலையத்தில் உள்ள காவல்துறையினர் அந்தப் பெண்ணின் அப்பா ஸ்தானத்திலிருந்து அவருக்கு வளைகாப்பு நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
