பொதுவாகச் சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு டிராஃபிக் போலீசாரால் பிரத்தியேகமான மஞ்சள் நிறக் கோடுகள் வரையப்பட்டுப் பார்க்கிங் வசதிகள் செய்யப்படுவது வழக்கம். ஆனால், விதிமுறைகளைப் பாதுகாத்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய டிராக் போலீசாரே, தங்களது டார்கெட்டை முடிப்பதற்காகவும் அபராதம் விதிப்பதற்காகவும் ஒரு விசித்திரமான காரியம் தற்சமயம் சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நடந்த இந்த அதிர்ச்சிச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகின்றன. அங்குள்ள சாலையில், வாகன ஓட்டி ஒருவர் இருசக்கர வாகனத்தை டிராஃபிக் விதிகளுக்கு உட்பட்டு, பார்க்கிங் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட மஞ்சள் நிறக் கோட்டிற்கு வெளியே பத்திரமாக நிறுத்திவிட்டுச் சென்றார். அப்போது அங்கு வந்த குஜராத் டிராஃபிக் போலீசார் மற்றும் வாகனங்களை இழுத்துச் செல்லும் டோவிங் வாகன ஊழியர்கள், அந்த பைக் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்பதை உணர்ந்தனர்.

ஆனால், அதற்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று உள்நோக்கத்தோடு, அந்த பைக்கை டிராக் போலீசாரே தங்களது கைகளால் இழுத்து, நோ-பார்க்கிங் பகுதிக்குள் வந்து நிறுத்தியுள்ளனர்.அதன் பின்னர், அந்த பைக் விதிமுறையை மீறி நோ-பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டதாகக் கூறி, அதைத் தங்களது டோவிங் வாகனத்தில் ஏற்றிப் பறிமுதல் செய்தது. டிராஃபிக் போலீசார் தங்களது சுயலாபத்திற்காகவும், அபராதத் தொகையை வசூலிப்பதற்காகவும் திட்டமிட்டு நடத்திய இந்த ஒட்டுமொத்த நாடகமும், அங்குள்ள ஒரு வணிக வளாகத்தின் சிசிடிவி கேமராவில் மிகத் துல்லியமாக பதிவாகியுள்ளது.

“>

இந்த வீடியோ ஆதாரத்துடன் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் டிராஃபிக் போலீசாரின் இந்த அத்துமீறலைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். “சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்களே இப்படி அநியாயமாகச் செட்டப் செய்து பைன் போட்டால், சாதாரண பொதுமக்கள் யாரை நம்புவது?” என்று இணையவாசிகள் பலரும் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.