சென்னையில் இன்று (ஜனவரி 7, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 12,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை தற்போது குறைந்திருப்பது நகை வாங்குவோருக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையிலும் இன்று கணிசமான சரிவு காணப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 6 ரூபாய் குறைந்து 277 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் அடிப்படையில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 6,000 ரூபாய் குறைந்து தற்போது 2,77,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தங்கம் மற்றும் வெள்ளி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
