தூத்துக்குடி: தமிழக அரசியல் களம் ஏற்கனவே குதிரை பேர வழக்கால் பயங்கர சூடாக இருக்கும் நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வைத்துள்ள அதிரடியான குற்றச்சாட்டு ஒட்டுமொத்த கோட்டையையும் அதிர வைத்துள்ளது!
ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தவெக-வின் சரவணன், தனது உயிருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகக் கூறி அதிரடியான ஒரு பிரேக்கிங் புகாரை முன்வைத்துள்ளார்.
”பதவிய ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டல்!”
செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்.எல்.ஏ சரவணன், “தனது எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுடன் தொடர்புடைய ஆட்கள் தன்னைத் தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள்,” என்று அனல் பறக்கக் குற்றம் சாட்டியுள்ளார்!
வெளியானது மாஸ் ஆடியோ ஆதாரம்!
மிரட்டல் குற்றச்சாட்டை சும்மா வாய வார்த்தையா சொல்லாமல், அதற்கான பக்கா ஆடியோ ஆதாரத்தையும் சரவணன் தற்பொழுது சோசியல் மீடியாவில் அதிரடியாக ரிலீஸ் செய்துள்ளார். நெல்லையைச் சேர்ந்த முத்துராமன் என்பவர், இது தொடர்பாகத் தன்னிடம் போனில் பேசி மிரட்டிய முழு ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளதால் திமுக தரப்பு அப்படியே ஷாக்காகிப் போயுள்ளது!
ஏற்கனவே திமுகவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குதிரை பேர வழக்கில் இந்த ஆடியோ ஆதாரம் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக எம்.எல்.ஏ சரவணன் உடைத்த இந்த அதிரடி ஆடியோ பாம் காரணமாக, தமிழக அரசியல் வட்டாரத்தில் இப்போதே உச்சக்கட்ட பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டுள்ளது!
