வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலியால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.02.2023) ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். முன்னதாக கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.