தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம்போல அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்தார். அவர் பேசும்போது தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் திட்டம் மற்றும் மகளிர் விடியல் பயணம் போன்ற பல்வேறு திட்டங்களால் ஏராளமான பெண்கள் பயனுடைந்துள்ளதாக கூறினார்.

பின்னர் தோழி விடுதிகள் பல அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதியோர்களின் நலனை‌காகாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து வரும் நிலையில் உலக தமிழர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும் என்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழி படிக்க ஏதுவாக 10 கோடி மதிப்பில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பள்ளி கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% பேர் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர் என்றும் 6 லட்சம் சுய உதவி குழுக்களுக்கு 1.40 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.