தமிழக சட்டப்பேரவையின் 2026-27-ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். பல்வேறு புதிய அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது

பட்ஜெட் உரையின் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்கும் பணிகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

சோழர், நொய்யல் மற்றும் வெண்கலக் கால வரலாற்றுச் சிறப்புகளைப் பறைசாற்றும் வகையில் புதிய அருங்காட்சியகங்கள் ரூ.285 கோடியில் அமைக்கப்படும்.

உலகப் பொதுமறையான திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளது. 19.34 லட்சம் பேர் பயன் பெறும் இந்தத் திட்டத்திற்கு ரூ.1889 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

10,637 குழந்தைகள் அன்புக் கரங்கள் திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்களுக்கு 25 அன்பு சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் சுயமாக தொழில் செய்ய இந்த அரசு மானியம் வழங்குகிறது. தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் மூத்த குடிமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

மேலும் வழக்கம் போலவே இந்த முறையும் டிஜிட்டல் முறையில் ‘காகிதம் இல்லா பட்ஜெட்டாக’ இது தாக்கல் செய்யப்பட்டது.