சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த ‘ஜனநாயகன்’ படத் தணிக்கை விவகாரத்தின் இறுதி விசாரணை இன்று முடிவுக்கு வந்தது. சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பு தரப்பு என இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

மும்பையில் இருந்து வந்த ரகசியப் புகார், நீக்கப்பட்ட காட்சிகளே மீண்டும் புகாராகத் தெரிவிக்கப்பட்டது எனப் பல அதிரடித் திருப்பங்களுடன் நடந்த இந்த வழக்கின் கிளைமாக்ஸ் இப்போது நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தீர்ப்பு வரும் வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த சஸ்பென்ஸ் நீடிப்பதால், ‘ஜனநாயகன்’ குழுவினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.