​’ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் இன்று தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு அதிரடி உண்மையை போட்டு உடைத்துள்ளது. “தணிக்கை வாரியம் எந்தெந்தக் காட்சிகளை நீக்கச் சொன்னார்களோ, அவர்கள் சொன்னபடியே அந்த எல்லாக் காட்சிகளையும் நாங்கள் நீக்கிவிட்டோம். ஆனால், வேடிக்கை என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே நீக்கிய அதே காட்சிகளைத் தான் இப்போது புகாராகத் தெரிவித்து படத்தை முடக்கியுள்ளனர்” என்று தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் ஆவேசமாக வாதிட்டார்.

​ஏற்கனவே நீக்கப்பட்ட காட்சிகளைச் சுட்டிக்காட்டி மீண்டும் மீண்டும் தள்ளிப்போடுவது என்ன நியாயம்? என்று நீதிபதிகள் முன்னிலையில் படக்குழுவினர் கேள்வி எழுப்பினர். “நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்தும், தணிக்கை வாரியம் எங்களை அலைக்கழிப்பது வேதனையளிக்கிறது” என்று அவர்கள் வாதிட்டபோது, நீதிமன்ற வளாகமே ஒரு நிமிடம் அமைதியானது. இந்த ‘லாஜிக்’ இல்லாத புகாரால் படத்தின் எதிர்காலம் இப்போது உச்சகட்ட சஸ்பென்ஸில் உள்ளது