‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை விவகாரம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தலைமை நீதிபதி ஒரு கறாரான கேள்வியை முன்வைத்தார். “இந்தப் படத்திற்கு எதிராகப் புகார் கொடுத்தது யார்?” என்று அவர் கேட்க, தணிக்கை வாரியம் கொடுத்த பதில் அனைவரையும் அதிர வைத்தது. “மும்பையில் உள்ள தணிக்கை வாரியத் தலைவரிடமிருந்துதான் எங்களுக்கு இந்தப் புகார் கிடைத்தது” என்று வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மறைமுகமாக யாரோ புகார் கொடுத்ததாக நினைத்துக் கொண்டிருந்த படக்குழுவினருக்கு, நேரடியாகத் தணிக்கை வாரியத் தலைவரே புகார் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் பேரிடியாக இறங்கியுள்ளது. இந்தப் புகாரைப் பெற்ற பிறகுதான், படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடிவு செய்ததாக வாரியம் விளக்கம் அளித்துள்ளது. படக்குழுவினரை திணறடித்த இந்தத் தகவல், சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது
