தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை தீவிரமாக தொடங்கியுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது எனவும் அவர் இருக்கும் கூட்டணியில் நாங்கள் இணைய மாட்டோம் எனவும் கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகினார். இதனை தொடர்ந்து புதிய கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்பை வெளியிடுவதாக கூறிவந்த நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைவதாக அறிவித்தார்.

மேலும் இதனைத் தொடர்ந்து பியூஸ்கோயலை நேரில் சந்தித்த டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உற்சாக வரவேற்பு கொடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.