அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த நிலையில் இன்று தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அவர் இணைந்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.

தற்போது அந்த தொகுதியில் கிட்டத்தட்ட நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த வைத்திலிங்கம் திமுகவில் இணைந்துள்ளதால் டெல்டா திமுக வசமாகும் என்று கூறப்படுகிறது. அதிமுக கட்சியின் பிரிவுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைந்து செயல்பட்ட வைத்திலிங்கம் என்று திமுகவில் இணைந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து பேசி உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, என்னிடம் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவுக்கு வருமாறு அழைத்த நிலையில் எனக்கு மீண்டும் அங்கு சேர விருப்பமில்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது அதிமுகவின் செயல்பாடுகள் சிறந்ததாக இல்லை.

ஆனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை மக்கள் போற்றுகிறார்கள். மக்கள் மனதில் முதல்வர் ஸ்டாலின் இருக்கும் நிலையில் தமிழ்நாடு மக்களின் வளர்ச்சிக்காக திமுக தான் பாடுபடுகிறது. மேலும் அதிமுகவிலிருந்து விலகினாலும் தற்போது நான் தாய் கழகத்தில் தான் இணைந்துள்ளேன் என்று அவர் கூறினார்.