அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை துரோகி என்று விமர்சித்த நிலையில் அதிமுக இருக்கும் கூட்டணியில் இருக்க முடியாது என தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகினார். இந்த நிலையில் இன்று மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவர் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் பியூஸ்கோயலை சந்தித்து இது தொடர்பாக பேச இருப்பதாக கூறினார்.
அதன் பிறகு மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைத்தது தொடர்பாக பேசிய டிடிவி தினகரன் எங்களுக்குள் இருப்பது பங்காளி சண்டை தான் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது என்று கூறினார்.
இந்த நிலையில் இது தற்போது நடிகர் விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைப்பார்கள் என செங்கோட்டையன் கூறியது குறிப்பிடத்தக்கது. இவர்களை தங்கள் கூட்டணிக்குள் இணைத்து வர விஜய் திட்டமிட்ட நிலையில் தற்போது டிடிவி தினகரன் திடீர் பல்டியாக மீண்டும் அதிமுக கூட்டணிக்கு சென்றார்.
இதற்கிடையில் ஓபிஎஸ் ஆதரவாளான டெல்டா முக்கிய புள்ளி வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். மேலும் இது விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று அவர்கள் கூறிய நிலையில் திமுகவில் இன்று வைத்திலிங்கம் இணைந்தார். மேலும் தற்போது ஓபிஎஸ் மற்றும் தேமுதிக எடுக்கப் போக முடிவு விஜய்க்கு சாதகமாக அமையும் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
