வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி கடந்த மாதம் 1930 ரூபாயாக இருந்த நிலையில் இன்று முதல் 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை குறைப்பின் மூலம் சாலையோர, நடுத்தர, டீ கடைக்காரர்கள் மற்றும் ஹோட்டல் கடைக்காரர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.