கோவை MY v3 ADS நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த v3 யூடியூப் சேனல் உரிமையாளர் விஜயராகவன் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.18,000 முதலீடு செய்தால் மாதம் ரூ.6000 லாபம் கிடைக்கும் என ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் கைது செய்ய முயன்றபோது, விஜயராகவனுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தபிறகு அவரை போலீசார் கைது செய்தனர்