தமிழக அரசியல் களத்தில் மற்றுமொரு பரபரப்பு பற்றிக்கொண்டுள்ள நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது அதிரடி அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் வரவுள்ள சூழலில், தவெக சார்பில் லாரன்ஸ் களம் காண்பார் எனப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவையொட்டி தனது அறிவிப்பை ஒரு நாள் தள்ளிவைத்திருந்த லாரன்ஸ், இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவில், “சூழ்நிலைகள் என்னை அரசியலில் நுழைய வேண்டிய ஒரு நிலைக்குக் கொண்டு வந்துள்ளன; பணம் சம்பாதிக்கும் எண்ணமோ, தேர்தலில் போட்டியிடும் ஆசையோ எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகத்திற்குப் பெரிய அளவில் சேவை செய்ய தனக்கு நெருக்கமான ஒருவருக்கு  துணையாக நின்று பணியாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அரசியல் குறித்த தனது புரிதல் மற்றும் தாயாரின் கண்ணோட்டம் அடங்கிய வீடியோவை இன்று காலை 10 மணிக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ள லாரன்ஸ், ரசிகர்களிடம் ஆசீர்வாதங்களையும் ஆலோசனைகளையும் கோரியுள்ளது கோலிவுட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.

“>