தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குனராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது வீடியோ மூலமாக தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார். அதன்படி சுயநலமில்லாமல் தன்னுடைய சேவைகளை எப்போதும் போல் தொடர்ந்து செய்வேன் என்று லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில் நான் அரசியலுக்கு வரவா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் உங்களுடைய கருத்தை நீங்கள் கீழே கமெண்டில் கூறலாம் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதோடு நான் யாருடன் இணைய வேண்டும் என்பதையும் எனக்கு அரசியலுக்கு வர தகுதி உள்ளதா என்பதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும் என கேட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் அவர் அரசியல் பற்றிய பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்துள்ளார். மேலும் முன்னதாக நடிகர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல்கள் பரவிய நிலையில் தற்போது அரசியலுக்கு வருவதா வேண்டாமா என்பது குறித்து வீடியோ மூலம் கேட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக அவர் விஜய் கட்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் ஒருவேளை தனி கட்சி தொடங்கலாமோ என்ற யூகங்களும் அதிகரித்துள்ளது.