சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் குறைந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின்  விலை 1480 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,23,720 ரூபாய்க்கும், ஒரு கிராம் 15,465 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,15,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.