தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் காலை 7:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஓட்டு போடுவதை யாரும் செல்போனில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ள நிலையில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதங்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் இதனையும் மீறி இன்று ஓட்டு போடுவதை சிலர் வீடியோ எடுத்து ரீல்சாக பதிவிட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசில் சின்னத்திற்கு வாக்களிப்பதை வீடியோ எடுத்து ரீல்சாக போட்ட சக்திவேல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் திருப்பத்தூர் தொகுதியில் அவர் வாக்களித்ததை வீடியோ எடுத்து பதிவிட்டுள்ள நிலையில் இவர் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
