விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 18க்கும் மேற்பட்டோரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.