ஆண்டிபட்டி அருகே 5 நாட்களாக நெசவாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள்.
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியை சேர்ந்த நெசவாளர்களின் கூலி ஒப்பந்தம் சென்ற மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் இதன் பின் சம்பள உயர்வு குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இதனால் விசைத்தறி நெசவாளர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரி சென்ற 2-ம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த போராட்டம் ஐந்து நாட்களாக நீடித்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக 30 லட்சம் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் நெசவு தொழிலாளர்களும் வருவாயை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக சென்ற நான்காம் தேதி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்து தோல்வியில் முடிந்தது. இதன்பின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள், தொழிற்சங்கத்தினர் என தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எந்தவித முடிவும் எட்டாமல் இந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில்தான் முடிந்தது.