தமிழகத்தில் கடந்த 20 நாளுக்கு மேலாக வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், இன்று முதல் 16ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று தென் மற்றும் வட தமிழகத்திலும், நாளை தென் தமிழகத்திலும் மிதமான மழை பெய்யும். ஏப். 13ஆம் தேதி தென், வட தமிழகத்தில் லேசான மழையும், 14-16ஆம் தேதி வரை மிதமான மழையும் பெய்யும். இதனால், வெப்பம் சற்று தணிந்து, குளிர்ந்த காற்று வீச வாய்ப்புள்ளது