தமிழகத்தின் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 960 ரூபாய் அதிகரித்துள்ளதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 46,500 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 820 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அதனைப் போலவே ஒரு கிராம் வெள்ளி ரெண்டு புள்ளி 50 காசுகள் உயர்ந்து 79.50 க்கும், கிலோ வெள்ளி 2500 ரூபாய் உயர்ந்து 79 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.