சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் உயர்ந்த நிலையில் தற்போது மாலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை தற்போது 800 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரே நாளில் 1680 ரூபாய் அதிகரித்துள்ளது.

இதனால் 22 கேரட் ஆபர்ண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,04,800 ரூபாய்க்கும் ஒரு கிராம் 210 வரையில் அதிகரித்து 13,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடுத்தர வர்க்க மக்கள் நகை வாங்க முடியாது என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.