தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதாவது, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 55 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படியை வழங்க இந்த உயர்வு வழிவகுக்கிறது.
இந்தச் சம்பள உயர்வு, கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் (முன்தேதியிட்டு) நடைமுறைக்கு வரும் என்றும், அதற்கான நிலுவைத் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
