சமூக செயற்பாட்டாளரும், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவருமான வீரலட்சுமி, நடிகர் விஜய்யிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யை அரசியல் கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த விமர்சனத்தின் போது விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்காகவே இந்த மன்னிப்புக் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த மன்னிப்பு, அரசியல் மற்றும் திரையுலக வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நடிகர் விஜய்யைப் பற்றித் தனிப்பட்ட முறையில் ஒருமையில் பேசியதற்கான விளக்கத்தையும் வீரலட்சுமி அளித்துள்ளார். தனது கண்முன்னே விஜய்யின் ரசிகை ஒருவர் இருந்ததைப் பார்த்த ஆத்திரத்தில் அவ்வாறு பேசிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி உள்ள நிலையில், அவரைச் சமூக மற்றும் அரசியல் ரீதியாக விமர்சிப்பவர்கள் சிலர், தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்வதாகப் பல நாட்களாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இந்த நிலையில், தனிப்பட்ட விமர்சனங்களுக்காக வீரலட்சுமி தற்போது பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
