காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்துக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 13) அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அணை கட்டுவதற்குக் குழப்பம் விளைவிக்கப்படுவதாகக் கூறி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த அறிவிப்பு வெளியானது. அத்துடன், காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கர்நாடகம் உட்படக் காவிரி படுகையில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு, தமிழகத்தின் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு பரபரப்பான விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
