தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்தார். அதன்படி 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விபரம் இதோ,

பெரியகுளம் – கதிர்காமு

மன்னார்குடி – காமராஜ்

திருவையாறு – கார்த்திகேயன்

காரைக்குடி – தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் – ஞானசேகர்

நாங்குநேரி – இசக்கி முத்து

ஓட்டப்பிடாரம் – சுந்தரராஜன்

திருச்சி மேற்கு – ராஜசேகரன்

சைதை – செந்தமிழர்

பூந்தமல்லி – ஏழுமலை

மடத்துக்குளம் – சி.சண்முகவேல்

மேலும் ஏற்கனவே அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.