அதானி நிறுவனத்தின் கடன் விவரங்களை வெளியிட முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் பதில் அளித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜ் என்பவர் அதனை கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் மத்திய அரசு வழங்க முடியாது.

இதன் காரணமாக அதானி தொடர்பான கடன் விபரங்களை சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார். இவ்வாறு அதானி கடன் விவகாரம் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.