அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறந்த குறும்பட பிரிவில் இந்திய ஆவண படமான The Elephant Whisperers என்ற படம் ஆஸ்கார் விருதினை வென்றது. அதன் பிறகு சிறந்த பாடல்களுக்கான பிரிவில் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது. இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளதால், இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் ஆஸ்கர் பெற்ற முதல் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இதற்கு வாழ்த்து கூறி டுவிட் செய்துள்ளார் அதில், வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் கீரவாணி, எழுத்தாளர் சந்திரபோஸ். கணிக்கப்பட்ட மற்றும் தகுதியான ஒன்று. உங்கள் இருவருக்கும் ஆர்ஆர்ஆர் குழுவிற்கும் ஜெய்ஹோ!! என பாராட்டு உள்ளார்.