சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3600 வரையில் அதிகரித்துள்ளது. நேற்று 1760 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3600 வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,982 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு இருபது ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 3,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.