சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் கோவிலின் காவலாளியாக பணிபுரிந்த அஜித் குமார் என்பவரை போலீசார் அழைத்து சென்று அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் ஐந்து போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.