சிவபெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நபர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் தொடர்ந்து நின்றுகொண்டே இருக்கும் அதிர வைக்கும் சம்பவம் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஒருமுறை கூட அமரவோ அல்லது தனது கால்களை நீட்டி ஓய்வெடுக்கவோ இல்லை என்று கூறப்படுகிறது. தூங்கும் போது கூட அவர் கீழே அமராமல், தன்னைத் தாங்கிப் பிடிப்பதற்காக பிரத்யேகமாக பலகையின் உதவியோடு நின்றுகொண்டே தூங்கித் தனது கடுமையான விரதத்தைத் தொடர்ந்து வருகிறார்.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதால், ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் அவரது கால்கள் இரண்டும் பயங்கரமான முறையில் வீங்கி, கறுப்பு நிறமாக மாறியுள்ளன. அவரது கால்களின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்படும் அந்தச் சிவன் கோவிலின் தன்னார்வலர்கள், அவரது கால்களில் மருந்துகள் மற்றும் தைலங்களைத் தடவித் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.
In India, a man has been standing in one place for five years as a vow to the god Shiva
He does not sit or stretch his legs and sleeps while supported by a special harness.
His legs have become severely swollen and darkened due to poor blood circulation, and temple volunteers… pic.twitter.com/fc0rIttXJ1
— NEXTA (@nexta_tv) June 14, 2026
தனது ஐந்து ஆண்டுகால இந்த மிகக் கடுமையான விரதக் காலம் முடிந்த பிறகு, தனக்குள் ஒரு பிரம்மாண்டமான உள் ஆற்றல் (Inner Energy) உருவாகும் என்றும், அந்த ஆன்மீகச் சக்தி சிவபெருமானையே நேரில் பிரசன்னமாகச் செய்ய வைக்கும் என்றும் அவர் தீர்க்கமாக நம்பி வருகிறார்
