தமிழக வெற்றி கழகத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இணையும் பிரம்மாண்ட விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தவெக-வின் முக்கிய நிர்வாகியான ரமேஷ், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.
“கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்கள் தானே ஆகிறது, அதற்குள் என்ன சேவை செய்துவிட்டீர்கள், என்ன போராட்டம் நடத்தி ஆட்சியைப் பிடித்துவிட்டீர்கள், வெறும் கவர்ச்சியைக் காட்டி ஆட்சியைப் பிடித்துவிட்டீர்கள்” எனத் தங்களை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ரமேஷ் இந்த மேடையில் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதில் கேள்வி எழுப்பிய ரமேஷ், “அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அப்படி என்ன பெரிய போராட்டம் செய்துவிட்டார்? அவர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா அல்லது தேசத்திற்காகச் சிறை சென்றாரா? மகாத்மா காந்தி போல அகிம்சை வழியில் போராடினாரா, நாட்டுக்காகச் செக்கிழுத்தாரா அல்லது சுபாஷ் சந்திரபோஸ் உடன் இணைந்து போர்க்களத்தில் நின்றாரா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
உதயநிதி என்ன சுகந்திர போராட்ட தியாகியா..?
~ @RameshOffcl pic.twitter.com/0Jaz9DMnIe
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) June 14, 2026
மேலும், அவர் என்ன சேவை செய்துவிட்டுத் துணை முதலமைச்சராகப் பதவி வகித்தார் என்று கேள்வி எழுப்பியதோடு, முதலமைச்சர் விஜய் அவர்கள் கடந்த 30 வருடங்களாக மக்கள் இயக்கம் என்ற பெயரில் பல்வேறு நற்பணிகளையும் சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார் என்று ரமேஷ் மேடையில் அதிரடியாக முழங்கியுள்ளார்.
