தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நலக்குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு மீண்டும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு காரில் சென்றார்.

முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் நலமுடன் இருப்பதாக கூறப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் விரைவில் நலம் அடைந்து வீட்டிற்கு திரும்புவார் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து படியே பணி செய்வதாக தற்போது கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே தன்னுடைய பணிகளை தொடர்வதாகவும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எந்தவிதமான தொய்வுகளும் ஏற்படக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா.? நேற்று வரை பெறப்பட்ட மனுக்கள் எத்தனை.? தீர்வு காணப்பட்டவை எத்தனை போன்றவற்றை உள்துறை செயலாளரிடம் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். மேலும் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் தொய்வு ஏற்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.