அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் சேர்வதற்காக சீமான் மற்றும் விஜய் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் சேர அழைப்பு விடுப்பு நிலையில் அவர்கள் அழைப்பை நிராகரித்து விட்டனர்.

இதைத்தொடர்ந்து விஜய் மற்றும் சீமான் ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைத்த நிலையில் தற்போது சீமான் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை நிராகரித்துவிட்டார். இது பற்றி சீமான் கூறும் போது தமிழ்நாட்டிற்கு எதற்கு தேசிய கட்சிகள்.? தீமையை வைத்து தீமையை எப்படி அழிக்க முடியும் என்று கேட்டார். மேலும் கூட்டணி அழைப்பை அவர் நிராகரித்ததோடு தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவேன் என கூறிவிட்டார்.