தமிழகத்தில் வருடம் தோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்  நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் மற்றும் ஐந்தாம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதனால் கணக்கெடுப்பு பணியில் ஆர்வமுள்ள பறவை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் கலந்து கொள்ளலாம். இது குறித்து மாவட்ட வன அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.