மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்பிக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்,  பிரகலாத் பட்டேல், ரேணுகா சிங், மகந்த் பாலாநாத்,  அருண் சாவ்,  கோமதி சாய்,  ராஜ்யவர்தன் சிங்  ரத்தோர், கிரோடிலால் மீனா,  ராகேஷ் சிங், உதய் பிரதாப், தியாகுமாரி ஆகிய 12 எம்பிக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதில் 5 பேர் மத்திய பிரதேச எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.