பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல் நல குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில்  நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர். அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.