வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் சென்ற மாதம் வெளியான வாரிசு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கு அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை பட தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் வருகின்ற 22 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

அதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள். இந்த நிலையில் விஜய் வாரிசு திரைப்படம் குறித்து பேசியுள்ளார். இந்த திரைப்படம் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். படம் மொத்தமாக பணக்காரன் பேக்ரவுண்ட் இருந்தாலும் கதையின் மையக்கரு எமோஷன்கள் மற்றும் குடும்பம் பற்றியதாக மட்டும் தான் இருந்தது என தெரிவித்திருக்கின்றார்.