கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் துருவா சர்ஜா தற்போது கேடி தி டெவில் திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர். இதில் நடிகர் துர்வா சர்ஜா ஆக்சன் கிங் அர்ஜூனினின் சகோதரி மகன் ஆவார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தக்லைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாதது குறித்து செய்தியாளர்கள் இயக்குனர் பிரேமிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, தாய்மொழி என்பது தாய் போல. தாய்மொழியைப் பற்றி தவறாக கூறினால் கோபம் வரும் தானே. நாங்கள் அவர்களின் மன்னிப்பை தான் எதிர்பார்க்கிறோம்.
கர்நாடகாவில் மற்ற தமிழ் படங்கள் வெளியாகிறது. மேலும் இந்த சர்ச்சையால் மட்டும் தான் கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகாமல் இருக்கிறது தவிர மற்ற அனைத்து தமிழ் திரைப்படங்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.
