தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும் நடிகர் விஜயின் அப்பாவாகவும் நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவில் முன்னாடி நடிகராக பலம் வரும் சஞ்சய் தத் லியோ திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் நடிகர் துருவா சர்ஜா நடித்துள்ள கேடி தி டெவில் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். அப்போது தமிழில் தன்னுடைய கதாபாத்திரம் வீணடிக்கப்பட்டதாக கூறினார். அதாவது இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடனான சந்திப்புகள் குறித்து பேசினார்.
பின்னர் நான் நடிகர் விஜய்யுடன் சேர்ந்து தமிழில் ஒரு படம் நடித்தேன். எனக்கு அந்த படம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் எனக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது கோபம் இருக்கிறது. ஏனெனில் அவர் எனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்காமல் என்னை வீணடித்துவிட்டார் என்ற கூறினார். மேலும் நடிகர் சஞ்சய் தத் கூறிய விஷயம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
