பாலிவுட்டின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சுனில் குரோவர், இரவில் சாலையோர நடைபாதையில் சாதாரண மக்களுடன் அமர்ந்து உறங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ‘தி கபில் சர்மா ஷோ’ மூலம் ‘குத்தி’ மற்றும் ‘டாக்டர் மஷூர் குலாட்டி’ போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான சுனில் குரோவர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கானின் ‘கஜினி’, சல்மான்கானின் ‘பாரத்’ மற்றும் ஷாருக்கானின் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஜவான்’ உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ‘பாகி’, ‘ஹீரொபந்தி’, ‘ராதே’ மற்றும் ‘தாண்டவ்’ வெப் சீரிஸ் ஆகியவற்றிலும் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இத்தகைய புகழ்பெற்ற லக்ஷரி லைஃப்ஸ்டைல் கொண்ட நடிகர், வெறும் டி-சர்ட் மற்றும் ஹாஃப் பேண்ட் அணிந்து கொண்டு, தரையில் ஒரு சாதாரண துணியை விரித்து நடைபாதையில் மிக இயல்பாக உறங்குவதைக் கண்ட ரசிகர்கள், அவருக்கு என்ன நேர்ந்தது என்று முதலில் அதிர்ச்சியடைந்தனர்.

https://www.instagram.com/reel/DZuaMVqsU9e/?utm_source=ig_embed&ig_rid=AWzX0CeYKzFlFvVGcySuvQP

இருப்பினும், இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள உண்மை வெளிவந்த பிறகு ரசிகர்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நடிகர் சுனில் குரோவர், தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை ஒரு  அழகான தலைப்புடன் அவரே பகிர்ந்துள்ளார். சினிமாவில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டிய பிறகும், சுனில் குரோவர் தனது எளிமையான குணத்தால் இது போன்ற வித்தியாசமான மற்றும் வேடிக்கையான வீடியோக்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு அவர் சாலையோரம் தேநீர் தயாரிப்பது மற்றும் காய்கறிகள் விற்பனை செய்வது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். அவரது இந்த தரைமட்ட சுபாவத்தையும் எளிமையையும் கண்டு வியந்த இணையவாசிகள், அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் தங்களது பாராட்டுகளையும் கருத்துகளையும் மழையாகக் குவித்து வருகின்றனர்.