நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமந்தா கடுமையான உடற்பயிற்சி மேற்கொள்வதை பார்த்த பலரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பலரும் லைக்குகளை தட்டி விடுவதால் அதுவும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் நடித்த மனோஜ் பாஜ்பாய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சமந்தா மிகவும் கடினமான உழைப்பாளி என்பது எனக்கு தெரியும். ஆனால் இந்த நேரத்தில் அவர் மிகவும் வலி கொடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளை நிறுத்த வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.