டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 9-ம் தேதி சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் பயணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(43) என்பவர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த சென்னை சவுகார்பேட்டை சேர்ந்த 37 வயதான பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் சென்னையில் தரை இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி ராஜேஷை கைது செய்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் ராஜேஷ் கைது செய்தனர். இந்த சம்பவத்தை குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.